தெற்கு குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

தெற்கு குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

Update: 2022-09-15 11:39 GMT

வீரபாண்டி

திருப்பூர் தெற்கு குறுமையத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கிடையேயான போட்டிகளை கோவில்வழி, அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி நடத்தி வருகின்றது. அதன் தொடர்ச்சியாக மாணவிகள் அனைத்து பிரிவினர்களுக்கான களப்போட்டிகள் நேற்று பிரண்ட்லைன் அகாடமி பள்ளியில் நடைபெற்றது. போட்டிகளை பிரண்ட்லைன் அகாடமி பள்ளியின் தாளாளர் சிவசாமி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், தொழிலதிபர் நிரஞ்சன், மோகனகிருஷ்ணா, அழகேசன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

விளையாட்டுப்போட்டியில் மாணவியர்களுக்கான 3000 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தத்திக்தாண்டுதல், கழியூன்றித்தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் முதலான போட்டிகள் நடைபெற்றது. இதில் திருப்பூர் தெற்கு குறுமையத்திற்குட்பட்ட அனைத்துவகைப்பள்ளிகளிலிருந்து சுமார் 350 மாணவிகள் கலந்துகொண்டனர்.குறுமைய இணைச்செயலாளர் மாணிக்கவாசகம், செந்தில்குமார், கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் முருகன், லாரன்ஸ், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் முன்னிலையில் போட்டியில் நடைபெற்றது. மாணவிகள் சிறப்பாக விளையாடி வெற்றிபெற்றனர். வெற்றி பெற்றவர்களை பிரண்ட் லைன் பள்ளி தாளாளர் சிவசாமி மற்றும் அதிகாரிகள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்