தென்இந்திய ஆணழகன் போட்டியில் ஆதித்தனார் கல்லூரி மாணவர் சாதனை

தென்இந்திய ஆணழகன் போட்டியில் ஆதித்தனார் கல்லூரி மாணவர் சாதனை படைத்துள்ளார்.

Update: 2023-07-14 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் சுயநிதி பிரிவில் 3-ம் ஆண்டு படித்து வருபவர் இசக்கிராஜ். இவர் இந்திய பிட்னஸ் பெடரேஷன் சார்பில், திருச்சி ஹல்க் ஜிம் நடத்திய தென்இந்திய அளவிலான ஆணழகன் போட்டியில் ஜூனியர் 60 கிலோ எடை பிரிவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்து உள்ளார்.

அவரை கல்லூரி முதல்வர் மகேந்திரன், உடற்கல்வி இயக்குனர் ஜிம்ரீவ்ஸ் சைலண்ட் நைட், பளுதூக்கும் மன்ற இயக்குனர் பேராசிரியர் தாவீது ராஜா, வணிகவியல் சுயநிதி பிரிவு துறை தலைவர் சிரில் அருண் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்