ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா, கணவருடன் சாமி தரிசனம்

ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா, கணவருடன் சாமி தரிசனம் செய்தார்.

Update: 2023-06-04 19:00 GMT

கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில் பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் தலமான திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான பெருநலமாமுலையம்மை சமேத மகாலிங்கசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நடிகர் ரஜினிகாந் தின் இளைய மகள் சவுந்தர்யா தனது கணவர் விசாகனுடன் நேற்று தரிசனம் செய்தார். அப்போது கோவில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சவுந்தர்யா- விசாகன் தம்பதியினர் கோவிலில் உள்ள விநாயகர், மகாலிங்கசாமி, பெருநலமாமுலையம்மை, மூகாம்பிகை அம்மன் உள்ளிட்ட சன்னதிகளில் வழிபாடு செய்தனர். தொடர்ந்து கோவிலில் உள்ள கோசாலையில் வழிபாடு மேற்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்