மார்கழி மாதத்தையொட்டி திருப்பாவை, திருவெம்பாவை பாடி ஊர்வலமாக சென்ற சிறுவர், சிறுமிகள்
தர்மபுரி:
ஆன்மிக மாதமான மார்கழி மாதத்தையொட்டி தர்மபுரி குமாரசாமிப்பேட்டையில் அதிகாலை நேரத்தில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சிறுவர், சிறுமிகள் திருப்பாவை, திருவெம்பாவை மற்றும் பக்தி பாடல்களை பாடியபடி ஊர்வலமாக சென்றனர். சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம், பல்வேறு தெருக்களின் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. அவர்களுக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் சிற்றுண்டி, தேனீர் மற்றும் பரிசு பொருட்களை வழங்கி சிறுவர், சிறுமிகளை உற்சாகப்படுத்தினர். மார்கழி மாதம் முழுவதும் இந்த ஊர்வலம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.