மாமியாரின் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மருமகன் குத்திக்கொலை

மாமியாரின் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மருமகன் குத்திக்கொலை செய்யப்பட்டார். வீடு புகுந்து வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-13 23:49 GMT

விழுப்புரம்,

புதுச்சேரி குருசுக்குப்பத்தை சேர்ந்தவர் முகுந்தன் (வயது 23). இவர் அதே பகுதியை சேர்ந்த ரம்யா (18) என்ற பெண்ணை காதலித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு இருவரும் விழுப்புரம் மாவட்டம் பட்டானூர் கலைவாணர் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர். அவரது வீட்டின் எதிரே முகுந்தனின் மாமியார் கோமதி வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கோமதிக்கும், குருசுக்குப்பத்தை சேர்ந்த தேவா (23) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதுகுறித்து தெரியவரவே தேவாவை, முகுந்தன் கண்டித்து எச்சரித்து உள்ளார். இது தேவாவுக்கு முகுந்தன் மீது விரோதத்தை வளர்த்தது.

சரமாரி குத்திக்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முகுந்தன் மனைவி ரம்யாவுடன் புதுச்சேரியில் உள்ள தியேட்டர் ஒன்றில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது மாமியார் வீட்டில் தேவா இருந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முகுந்தன் அவரிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டார்.

பின்னர் தேவா அங்கிருந்து சென்றுவிட்டார். நேற்று அதிகாலை 4 மணியளவில் மீண்டும் தேவா, முகுந்தனின் வீட்டுக்கு சென்று அவரிடம் என்னை, தட்டிக்கேட்க நீ யார்? என்றுக்கூறி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முகுந்தனை சரமாரியாக குத்திக் கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டார்.

வாலிபர் கைது

அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ரம்யா, அங்கேயே மயங்கி விழுந்தார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று முகுந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, புதுச்சேரி பஸ் நிலையத்தில் பதுங்கி இருந்த தேவாவை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்