மாமியாரை தாக்கிய மருமகன் கைது

ஆம்பூரில் மாமியாரை தாக்கிய மருமகன் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-11 17:29 GMT

ஆம்பூர் குண்டாளமன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சாந்தி (வயது 52). இவரது மகள் பிரியாவுக்குவும் ஆம்பூர் சாய்பாபா கோவில் தெருவை சேர்ந்த முரளி என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரியா கணவரை பிரிந்து அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆம்பூர் பைபாஸ் சாலை வழியாக பிரியாவின் தாயார் சாந்தி நடந்த சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த முரளி மாமியார் ஆபாசமாக திட்டி தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த சாந்தி ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து முரளியை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகின்றது.

Tags:    

மேலும் செய்திகள்