பெண்ணை கத்தரிக்கோலால் குத்திய மகன் கைது
பெண்ணை கத்தரிக்கோலால் குத்திய மகன் கைது செய்யப்பட்டார்
ராஜபாளையம்,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தாட்கோ காலனியை சேர்ந்தவர் அபிராமி. இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மகன் ஜெயசூர்யா (வயது 19). இந்தநிலையில் அபிராமிக்கும், ஜெயசூர்யாவின் நண்பர் ஆரோக்கியம் (26) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயசூர்யா பலமுறை கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அபிராமிக்கும், ஆரோக்கியத்திற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வீட்டிற்கு வந்த ஜெயசூர்யா, ஆரோக்கியத்தை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயசூர்யா கத்தரிக்கோலால் அபிராமியை குத்தினார். இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயசூர்யா, ஆரோக்கியம் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.