தாயை தாக்கிய மகன் கைது

மூலைக்கரைப்பட்டி அருகே தாயை தாக்கிய மகன் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-18 21:25 GMT

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள தெய்வநாயகபேரியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி ஆறுமுகம் அம்மாள் (வயது 63). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். அவர்களில் 2-வது மகன் கோபாலகிருஷ்ணன் (38) மனைவியை பிரிந்து தாயாருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கோபாலகிருஷ்ணன் பண்ணை வீட்டை தனது பெயருக்கு எழுதி தர வலியுறுத்தி தாயாருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.

சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டுக்கு வந்த அவர் தனது தாயார் ஆறுமுகம் அம்மாளை கம்பால் தாக்கினார். இதில் காயமடைந்த ஆறுமுகம் அம்மாள் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் மூலைக்கரைப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கோபாலகிருஷ்ணனை கைது செய்தார்.


Tags:    

மேலும் செய்திகள்