தாயை தாக்கிய மகன் கைது

மூலைக்கரைப்பட்டி அருகே தாயை தாக்கிய மகன் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-07 19:22 GMT

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள தெய்வநாயகபேரியை சேர்ந்தவர் பெருமாள் மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 35). இவருடைய அண்ணன் பரமசிவன் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு நடந்த விபத்தில் இறந்து விட்டார். இதையடுத்து அவரது மனைவி சுமிதா (33) என்பவர் பெருமாளுக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று கோபாலகிருஷ்ணன், சுமிதா வீட்டுக்கு சென்று இங்கு இருக்கக்கூடாது என்று கூறி தகராறு செய்தார். அப்போது அங்கு வந்த கோபாலகிருஷ்ணனின் தாயார் ஆறுமுகம் அம்மாள் (65) தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த கோபாலகிருஷ்ணன், ஆறுமுகம் அம்மாளை தலையில் கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் மூலைக்கரைப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கோபாலகிருஷ்ணனை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்