தந்தையை தாக்கிய மகன் கைது

தந்தையை தாக்கிய மகன் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-17 20:47 GMT

செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பெரியாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால்(வயது 71). ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர். இவருக்கு ரவி(44) உள்பட 5 மகன்கள் உள்ளனர். தந்தை- மகன்களுக்கு இடையே கடந்த பல ஆண்டுகளாக சொத்து பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ரவி அவரது முந்திரி தோட்டத்தில் டிராக்டரை எடுத்து கொண்டு உழவுப்பணி செய்ய சென்றுள்ளார். அப்போது தந்தை, மகனிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ரவி முந்திரிக்கட்டையால் தாக்கியதில் ராஜகோபால் காயமடைந்தார். உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்த புகாரின்பேரில் செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்து செந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்