காங்கயம் அருகே வழிவிடுமாறு ஹாரன் அடித்ததால் ஆத்திரம் அடைந்த போதை ஆசாமிகள் அரசு பஸ் டிரைவரை இழுத்துப்போட்டு நடுேராட்டில் தாக்கும் காட்சி சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

காங்கயம் அருகே வழிவிடுமாறு ஹாரன் அடித்ததால் ஆத்திரம் அடைந்த போதை ஆசாமிகள் அரசு பஸ் டிரைவரை இழுத்துப்போட்டு நடுேராட்டில் தாக்கும் காட்சி சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Update: 2023-04-18 12:06 GMT

முத்தூர்,

காங்கயம் அருகே வழிவிடுமாறு ஹாரன் அடித்ததால் ஆத்திரம் அடைந்த போதை ஆசாமிகள் அரசு பஸ் டிரைவரை இழுத்துப்போட்டு நடுேராட்டில் தாக்கும் காட்சி சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அரசு பஸ்

ஈரோட்டில் இருந்து பழனிக்கு நேற்று முன்தினம் அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ்சை டிரைவர் மேகநாதன் ஓட்டி வந்தார். அந்த பஸ் மதியம் 1 மணிக்கு அரச்சலூர் அருகே வடபழனி பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது மேல் சட்டை அணியாத அறைகுறை ஆடை அணிந்த வாலிபர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் மதுபோதையில் வந்தனர். அவர்கள் அரசு பஸ்சின் முன்னால் சென்றவாறு பஸ்சுக்கு வழிவிடாமல் கூச்சல் போட்டுக்கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து பஸ் டிரைவர் வாலிபர்கள் சென்ற வாகனங்களை நோக்கி ஹாரன் அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த போதை வாலிபர்கள் மீண்டும் பஸ்சுக்கு வழிவிடாமல் தாறுமாறாக சென்றுள்ளனர்.

இப்படி பஸ்சுக்கு வழிவிடாமல் ரகளையில் ஈடுபட்டவாறு 7 கிலோ மீட்டர் தூரம் வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் பஸ் திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உள்ள முள்ளிப்புரம் காங்கயம் அரசு கலை-அறிவியல் கல்லூரி பஸ் நிறுத்தத்தில் வந்து நின்றது. பின்னர் அங்கு மாணவர்களை ஏற்றி கொண்டு பஸ் மீண்டும் புறப்பட்டது.

அப்போது மோட்டார்சைக்ளில் வந்த அந்த போதை ஆசாமிகள் பஸ்சை வழிமறித்தனர். இதனால் பஸ்சை டிரைவர் நிறுத்தினார். பின்னர் அந்த ஆசாமிகள் டிரைவரின் சட்டையை பிடித்து கீழே இழுத்து ரகளையில் ஈடுபட்டதோடு அவரை கடுமையாக தாக்கினர். இதையடுத்து பஸ்சில் பயணம் செய்த பயணிகள் போதை ஆசாமிகளிடம் இருந்து டிரைவரை மீட்டனர். இதுகுறித்து டிரைவர் மேகநாதன் காங்கயம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீடியோ வைரல்

இந்த நிலையில் அரசு பஸ் டிரைவர் தாக்கப்படுவதை பஸ்சில் பயணித்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. இதையடுத்து அரசு பஸ் டிரைவரை தாக்கிய போதை ஆசாமிகளை வீடியோ ஆதாரத்துடன் போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அரசு போக்குவரத்து கழகப் பணியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

------------

Tags:    

மேலும் செய்திகள்