டி.கல்லுப்பட்டி அருகே கார் கவிழ்ந்து ராணுவ வீரர் சாவு- 3 பேர் படுகாயம்
டி.கல்லுப்பட்டி அருகே கார் கவிழ்ந்து ராணுவ வீரர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
பேரையூர்,
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ளது பி.சுப்புலாபுரம். இந்த ஊரை சேர்ந்தவர் ரவிசங்கர் (வயது 28). திருமணமானவர். அசாமில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் ரவிசங்கர் ெசாந்த ஊருக்கு வந்திருந்தார். அவர் மற்றும் 4 பேர் பி.சுப்புலாபுரத்தில் இருந்து குற்றாலத்துக்கு சென்று விட்டு மீண்டும் கார் ஒன்றில் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். டி.கல்லுப்பட்டி அடுத்துள்ள ஏ.பாரைப்பட்டி அருகே கார் வரும்போது திடீரென்று எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த ராணுவ வீரர் ரவிசங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காரில் இருந்த வேல்ராஜ் (51), மகேந்திரன், அரவிந்தன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் 3 பேரும் பேரையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரவிசங்கரின் உடல் பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பேரையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.