வாளவாடி பகுதியில் உள்ள குட்டையில் இருந்து கிராமல் கடத்தி செல்லப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வாளவாடி பகுதியில் உள்ள குட்டையில் இருந்து கிராமல் கடத்தி செல்லப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Update: 2023-05-24 13:23 GMT

தளி

வாளவாடி பகுதியில் உள்ள குட்டையில் இருந்து கிராமல் கடத்தி செல்லப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கிராமல் மண் கடத்தல்

உடுமலையை அடுத்த பெரிய வாளவாடிக்கு உட்பட்ட பகுதியில் சாப்டியார் குட்டை உள்ளது. இந்த குட்டையில் இருந்து கிராவல் மண் எடுப்பதற்கு அனுமதி கோரி விவசாயிகள் விண்ணப்பித்து இருந்ததாக தெரிகிறது. ஆனால் அனுமதி அளிப்பதில் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்தனர். இந்த சூழலில் நேற்று சப்டியார் குட்டையில் முறையான அனுமதி பெறாமல் ஒருசிலர் கிராவல் மண்ணை அள்ளிச் சென்றனர்.

இது குறித்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

பெரியவாளவாடி பகுதியில் உள்ள சப்டியார் குட்டை சுற்றுப்புற கிராமங்களில் உள்ள கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் நீர்வரத்தை அளித்து வருகிறது. இதனால் விவசாயிகள் கிராவல் மண்ணை எடுத்து குட்டையை ஆழப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வந்தனர். ஆனால் அதிகாரிகள் இதற்கு அனுமதி அளிக்கவில்லை.

இந்த சூழலில் குட்டையில் இருந்து கிராவல்மண் கடத்தி செல்லப்படுகிறது. தனி நபர்கள் கிராவல் மண்ணை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

அரசுக்கு இழப்பு

இதனால் அரசுக்கு இழப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. எனவே வாளவாடி பகுதியில் சப்டியார் குட்டையில் இருந்து சட்டவிரோதமாக கிராவல்மண்ணை கடத்திச் சென்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.அத்துடன் விவசாயிகளுக்கு கிராவல் மண்ணை அள்ளுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Tags:    

மேலும் செய்திகள்