பீர்பாட்டில்கள் வடிவில் குளிர்பானங்கள்

கல்வி நிறுவனங்கள் அருகே சிவகாசியில் பீர்பாட்டில்கள் வடிவில் குளிர்பானங்கள் விற்பது அதிகாரிகள் ஆய்வின் போது கண்டறியப்பட்டது.

Update: 2022-06-13 19:23 GMT

சிவகாசி, 

சிவகாசி சுகாதார அதிகாரி ஜெயச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள் பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? காலாவதியான உணவு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளதா? என ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் சிவகாசியில் உள்ள ஒரு கல்லூரியின் அருகில் உள்ள கடைக்கு சென்றனர்.

அங்கு ஆய்வு செய்த போது, பீர் பாட்டில்கள் போன்று இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த பாட்டிலில் உள்ள தகவல்களை சரி பார்த்தபோது அது மதுபாட்டில் இல்லை என்று தெரியவந்தது. ஆனால் உருவ ஒற்றுமை மதுபாட்டிலை போன்றே இருந்துள்ளது. இதுகுறித்து சுகாதார அதிகாரி ஒருவர் கூறும் போது, "இளைஞர்கள் மற்றும் மாணவர்களை தவறான பாதைக்கு திருப்பும் வகையில் சில குளிர்பான நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை மதுபாட்டில்கள் போன்று வடிவமைத்து விற்பனைக்கு அனுப்பி வைத்துள்ளன. இதை தடுக்க மேல் அதிகாரிகளுக்கு ெதரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்். இதே போல் சிவகாசியில் மேலும் சில கல்வி நிறுவனங்களின் அருகில் உள்ள கடைகளில் இந்த வகை குளிர்பானங்கள் விற்கப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எனவே அந்த கடைகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்