போதை சாக்லெட் பறிமுதல்
திருப்பூர் அருகே 1½ கிலோ போதை சாக்லெட் பறிமுதல் செய்யப்பட்டு பீகார் வாலிபர் கைது செய்யப்பட்டார்
திருப்பூர் அருகே 1½ கிலோ போதை சாக்லெட் பறிமுதல் செய்யப்பட்டு பீகார் வாலிபர் கைது செய்யப்பட்டார்
திருப்பூர் அருகே பொங்குபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பரமசிவம் பாளையத்தில் போதை சாக்லெட் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பெருமாநல்லூர் இன்ஸ்பெக்டர் ஹேமலதா தலைமையிலான போலீசார் பரமசிவம்பாளையத்தில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்திற்கு சொந்தமான விடுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இன்டெல் குமார் (வயது 26) என்பவரின் பையை சோதனை செய்தபோது அதில் 150 கிராம் எடை கொண்ட 10 பாக்கெட் போதை சாக்லேட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பெருமாநல்லூர் போலீசார் இன்டெல் குமார் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்த 1½ கிலோ போதை சாக்லேட்டையும் பறிமுதல் செய்தனர்.