கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா

கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா

Update: 2023-09-29 12:35 GMT

போடிப்பட்டி

திருப்பூர் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் மற்றும் போஷன் அபியான் இணைந்து நடத்திய சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி மடத்துக்குளம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத்தலைவரும், மடத்துக்குளம் மேற்கு ஒன்றியக் செயலாளருமான கே.ஈஸ்வரசாமி மற்றும் மடத்துக்குளம் கிழக்கு ஒன்றியக் செயலாளர் எம்.ஏ.சாகுல் அமீது ஆகியோர் தலைமை தாங்கினர். நிகழ்ச்சியில் 100- க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டு சீர்வரிசைகள் வழங்கப்பட்டன.

மேலும் கர்ப்ப காலப் பராமரிப்பு, ஊட்டச்சத்துக்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மேலும் அரங்கில் ஊட்டச்சத்து கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் மடத்துக்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் கலைவாணி பாலமுரளி, மடத்துக்குளம் மேற்கு ஒன்றியக் துணை செயலாளர் துரை.பாலமுரளி, மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் த.கவுதம்ராஜ், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வேளாங்கண்ணி, கணியூர் வட்டார மருத்துவ அலுவலர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



Tags:    

மேலும் செய்திகள்