கோபி அருகே பட்டாக்கத்தியுடன் பொதுமக்களை மிரட்டிய வாலிபர்- சமூகவலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்

கோபி அருகே பட்டாக்கத்தியுடன் பொதுமக்களை மிரட்டிய வாலிபர்- சமூகவலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்

Update: 2023-03-15 20:31 GMT

கடத்தூர்

கோபி அருகே உள்ள நஞ்சகவுண்டன்பாளையம் குஞ்சாங்காட்டு வீதியை சேர்ந்தவர் கிஷோர் (வயது 30). இவர் தனது பனியனின் பின்புறம் பட்டாக்கத்தியை சொருகிக்கொண்டு கடந்த 14-ந் தேதி இரவு 7 மணி அளவில் அந்த பகுதியில் சுற்றி திரிந்தபடி அந்த பகுதி மக்களை மிரட்டியுள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து கோபி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்