தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 216 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 216 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-10-13 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை போதை பொருள் கடத்தில், கொலை, கொலை முயற்சி, போக்சோ,கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் ெதாடர்புடைய 216 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வாலிபர் கொலை வழக்கு

தூத்துக்குடி சின்னகண்ணுபுரம் பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் வைத்து, தூத்துக்குடி அண்ணாநகர் மகிழ்ச்சிபுரத்தை சேர்ந்த ஆத்திமுத்து மகன் கார்த்திக் (வயது 25) என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தூத்துக்குடி அழகேசபுரத்தை சேர்ந்த கந்தையா மகன் ராம்தேவன் (20) என்பவரை சிப்காட் போலீசார் கைது செய்தனர். இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ராம்தேவனை கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார்.

போலீசார் அதிரடி

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, போக்சோ, போதைப்பொருள் கடத்தல், விற்பனை உள்ளிட்ட வழக்குகளில் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த வகையில் நடப்பு ஆண்டில் மாவட்டம் முழுவதும் இதுவரை போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட 13 பேர், போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 38 பேர், கொலை, கொள்ளை உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 216 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்