தாளவாடி மலைப்பகுதியில் கடும் குளிரால் பொதுமக்கள் அவதி
தாளவாடி மலைப்பகுதியில் கடும் குளிரால் பொதுமக்கள் அவதி
தாளவாடி
தாளவாடி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பகல் நேரங்களில் வெயில் வாட்டி வருவதும், இரவு நேரத்தில் கடும் குளிரும் வாட்டி வருகிறது. இதனால் மலைக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இரவு நேரத்தில் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.
அதேபோல விவசாய தோட்டத்தில் உள்ள புல்வெளியில் பனித்துளிகள் போர்வை போல் படர்ந்து அழகாக காட்சியளிக்கிறது.
கடும் குளிர் காரணமாக பொதுமக்கள் காலை 8 மணி வரை வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.