மோப்ப நாய் உயிரிழப்பு

மதுரை மத்திய சிறை மோப்ப நாய் உயிரிழந்தது.

Update: 2023-01-20 18:45 GMT

மதுரை மத்திய சிறையில் வெடிகுண்டு கண்டறியும் திறன் கொண்ட மோப்பநாய் கடந்த 2010-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதற்கு அர்ஜுன் என்று பெயரிடப்பட்டு இருந்தது. கடந்த 2020-ம் ஆண்டு அந்த மோப்ப நாய்க்கு பணி ஓய்வு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து நாயை சிறை நிர்வாகம் கவனித்து வந்தது.

இந்த நிலையில் முதுமை காரணமாக மோப்பநாய் அர்ஜுன் நேற்று காலை இறந்தது. இதையடுத்து அந்த நாயின் உடல் சிறை சூப்பிரண்டு வசந்தகண்ணன் தலைமையில் அரசு மரியாதையுடன் 24 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்