திண்டுக்கல் ரெயில்நிலையத்தில் மோப்பநாய் சோதனை
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் மோப்பநாய் சோதனை நடைபெற்றது.
நாடு முழுவதும் சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ்நிலையம், ரெயில்நிலையம், கோவில் ஆகிய பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் அங்கு போலீசார் பொதுமக்கள் கொண்டு வரும் உடைமைகளை சோதனை செய்து வருகின்றனர். அதன்படி திண்டுக்கல் ரெயில்நிலையத்தில் நடைமேடை பகுதிக்கு வந்த பயணிகளிடம் மோப்பநாய் ரூபி மூலம் சோதனை நடைபெற்றது.