வடமதுரை அருகே கிணற்றில் தத்தளித்த பாம்பு

வடமதுரை அருகே கிணற்றில் தத்தளித்த பாம்பு மீட்கப்பட்டது.

Update: 2022-11-05 15:00 GMT

வடமதுரை அருகே உள்ள வெள்ளபொம்மன்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர், தனது தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறார். நேற்று இவரது தோட்டத்தில் உள்ள 40 அடி ஆழமுள்ள கிணற்றில் பாம்பு ஒன்று, தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தது. இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு பாலகிருஷ்ணன் தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் கிணற்றில் இறங்கி அந்த பாம்பை மீட்டனர். இது, கண்ணாடி விரியன் பாம்பு ஆகும். 5 அடி நீளம் இருந்தது என்று வனத்துறையினர் தெரிவித்தனர். அந்த பாம்பை, தீயணைப்பு படையினர் வனப்பகுதியில் விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்