வக்கீல் வீ்ட்டுக்குள் புகுந்த பாம்பு
மன்னார்குடியில் வக்கீல் வீ்ட்டுக்குள் புகுந்த பாம்பு தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்
மன்னார்குடி:
மன்னார்குடி கோபாலசமுத்திரம் வடக்குவீதியை சேர்ந்தவர் தமிழரசன். (வக்கீல்). இவரது வீட்டு முன்பகுதியில் உள்ள அழகு செடிகள் உள்ள பகுதியில் நேற்று காலை ஒரு பாம்பு ஊர்ந்து சென்றது. இதைக்கண்ட வக்கீல் தமிழரசன் மற்றும் குடும்பத்தினர் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த மன்னார்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் செடிகளுக்குள் பதுங்கி இருந்த 5 அடி நீளமுள்ள பாம்பை லாவகமாக பிடித்தனர். பிடிபட்ட பாம்பை வனப்பகுதியில் தீயணைப்பு வீரர்கள் விட்டனர்.