வீட்டின் குளியல் அறையில் புகுந்த பாம்பு
அய்யம்பேட்டை அருகே வீட்டின் குளியல் அறையில் புகுந்த பாம்பை கான்கிரீட் தளத்தை உடைத்து பிடித்தனர்.
அய்யம்பேட்டை;
அய்யம்பேட்டை அருகே உள்ள கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் மகேஸ்வரி. நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டின் குளியல் அறையின் கான்கிரீட் தளத்தில் கீழே உள்ள ஒரு பொந்தில் பாம்பு ஒன்று புகுந்து கொண்டது. நீண்ட நேரமாகியும் அந்த பாம்பு மீண்டும் வெளியே வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மகேஸ்வரி இது குறித்து வனத்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று குளியல் அறையின் கான்கிரீட் தளத்தை உடைத்து நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு சுமார் 6 அடி நீளம் உள்ள கொடிய விஷத்தன்மை கொண்ட நல்ல பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை வனப்பகுதியில் விட்டனர்.