தர்மபுரி:
தர்மபுரி அருகே உள்ள நாகரசனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாது (வயது 47). இவர் கடந்த பல ஆண்டுகளாக கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று மாது, வீட்டின் அருகே ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்தது. இதனால் மயங்கிய அவரை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் இறந்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பான புகாரின் பேரில் தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.