அம்மாபேட்டை அருகே பாம்பு கடித்து பெண் சாவு
அம்மாபேட்டை அருகே பாம்பு கடித்து பெண் சாவு
அம்மாபேட்டை
அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் பச்சாயி (வயது 48). இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டத்துக்கு நிலக்கடலை பறிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது இவரை பாம்பு ஒன்று கடித்துள்ளது.
இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குருவரெட்டியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மீண்டும் மேல்சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு் வரும் வழியிலேயே இறந் துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.