பெங்களூருவில் இருந்து திருக்கோவிலூர் பகுதிக்குகூரியர் மூலம் புகையிலை பொருட்கள் கடத்தல்வாலிபர் கைது

பெங்களூருவில் இருந்து திருக்கோவிலூர் பகுதிக்கு கூரியர் மூலம் புகையிலை பொருட்களை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-08-19 18:45 GMT


திருக்கோவிலூர் 

திருக்கோவிலூர் அடுத்து அரகண்டநல்லூர் அருகே உள்ள டீ தேவனூர் கிராமத்தில் இடிந்து போன ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைதது. அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான போலீசார், அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது, அங்கு 50 கிலோ ஹான்ஸ் புகையிலை பொருட்கள் மற்றும் பெங்களூருவில் இருந்து கூரியர் மூலம் வந்திருந்த ஒரு பார்சலில், 50 கிலோ எடை உள்ள புகையிலை பொருட்களும் இருந்தன. மொத்தம் 100 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

வாலிபர் கைது

இது தொடர்பாக திருக்கோவிலூர் ஹாஸ்பிட்டல் தெருவை சேர்ந்த தர்காஜி என்பவரது மகன் ராம் சிங் (வயது 33) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம், இதுபோன்று, கூரியர் மூலம் இதுவரை எவ்வளவு புகையிலை பொருட்கள் பெங்களூருவில் இருந்து திருக்கோவிலூர் பகுதிக்கு கடத்தி வரப்பட்டது. இதன் பின்னணியில் யார்? யார்? உள்ளனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்