காரில் புகையிலை பொருட்கள் கடத்தல்; 3 பேர் கைது

நத்தத்தில் காரில் 500 கிலோ புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-20 21:00 GMT

நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாண்டியன் தலைமையிலான போலீசார் நேற்று நத்தம்-அய்யாபட்டி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள தேங்காய் குடோனிலும் போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது அங்கு ஒரு காரும், அதன் அருகில் 5 பேரும் நின்று கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் 5 பேரும் தப்பி ஓட முயன்றனர். இதையடுத்து அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அதில், 3 பேர் சிக்கினர். 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து பிடிபட்ட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் நத்தம் அருகே உள்ள ஊராளிபட்டியை சேர்ந்த சுதாகர் (வயது 35), நத்தத்தை சேர்ந்த முகமது ஈசாக் (34), ஜகாங்கீர் (37) என்பதும், கோவையில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து கார் மற்றும் 500 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய கார் டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்