காரில் புகையிலை பொருட்கள் கடத்தல்

திருக்கோவிலூர் அருகே காரில் புகையிலை பொருட்கள் கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-12 18:45 GMT

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே தபோவனம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் அரகண்டநல்லூர் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் லியோ சார்லஸ் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் அந்த காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 6 ஆயிரம் பாக்கெட் புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த கார் மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தொடர்பாக கார் டிரைவரான மணம்பூண்டி கிராமத்தை சேர்ந்த முருகன் (வயது 45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்