புகையிலை பொருட்கள் கடத்தல்; 3 பேர் கைது

புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-05 18:42 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் அங்குள்ள விருத்தாசலம்-காட்டுக்கூடலூர் சாலையில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அந்த காரில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களையும் மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர். புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தொடர்பாக விருத்தாசலம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த மன்சூர் அலி (வயது 38), திருப்பூர் மாவட்டம், வேலம்பாளையத்தை சேர்ந்தமுகமது அப்துல்லா (42), புவனகிரி அருகே அகரம் ஆலம்பாடி பகுதியை சேர்ந்த முகமது அலி (44) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்