ரேஷன் அரிசி, துவரம் பருப்பு கடத்தல்

புதுப்பேட்டை அருகே ரேஷன் அரிசி, துவரம் பருப்பு கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-07-04 18:45 GMT

புதுப்பேட்டை, 

பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா உத்தரவின்பேரில் புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் மந்திபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் அங்கு நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் வேலூரை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (வயது 45) மற்றும் பழனி (55) என்பதும், மந்திபாளையம் பகுதி மக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி, துவரம் பருப்பு ஆகியவற்றை வாங்கி அதனை மோட்டார் சைக்கிள்கள் மூலம் கடத்தி வந்து மினிலாரிகளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இடையே பதுக்கி வைத்து கேரளாவுக்கு கடத்த முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து பழனி, தட்சிணாமூர்த்தி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 120 கிலோ ரேஷன் அரிசி, 40 கிலோ துவரம் பருப்பு மற்றும் 2 மினி லாரிகள், 2 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்