நெல் அரவை ஆலைகளில் ரேஷன் அரிசி கடத்தலா? போலீசார் திடீர் சோதனை

நெல் அரவை ஆலைகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா? என போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

Update: 2022-11-05 20:29 GMT

நெல் அரவை ஆலைகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா? என போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

திடீர் ஆய்வு

குடிமைபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு திருச்சி சரக துணை போலீஸ் சூப்பிரண்டு சுதர்சன் மற்றும் இன்ஸ்பெக்டர் கோபிநாத் ஆகியோர் அடங்கிய குழுவினர் மண்ணச்சநல்லூர் பகுதிகளில் உள்ள ரேஷன் அரிசிக்கான நெல் அரவை செய்யும் அரிசி ஆலைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் இருந்து வரும் நெல் தரமாக வருகிறதா? அரிசி ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் அரிசி தரமாக இருக்கிறதா? என பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அது மட்டுமல்லாமல் ரேஷன் அரிசி பாலிஷ் செய்யப்பட்டு வேறு எங்கேயும் கடத்தப்படுகிறதா? எனவும் சோதனை செய்தனர். மண்ணச்சநல்லூர் பகுதியில் மட்டும் 4 ஆலைகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

துறையூர், மணப்பாறை

அதன் தொடர்ச்சியாக துறையூர் மற்றும் மணப்பாறை பகுதிகளில் உள்ள ஆலைகளிலும் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க எந்த முறைகேடுகளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், இந்த சோதனை விவரங்கள் காவல்துறை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அக்குழுவினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்