காரில் ரேஷன் அரிசி கடத்தல்; 3 பேர் கைது
உவரி அருகே காரில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் மகேசுவரன் மற்றும் போலீசார் நேற்று உவரியில் இருந்து திசையன்விளை செல்லும் ரோட்டில் இடையன்குடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு காரில் 10 மூட்டைகளில் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக நாங்குநேரி கிருஷ்ணன்புத்தூர் சுரேஷ் (வயது 46) மற்றும் டிரைவர் பணகுடியை சேர்ந்த சுடர் (31) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து காருடன், ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதவிர களக்காடு டாஸ்மாக் கடை அருகே போலீசார் சோதனை செய்த போது, ஒரு காரில் 20 மூட்டைகளில் 800 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக நம்பிதலைவன்பட்டயம் தளவாய்புரத்தை சேர்ந்த நாகா அர்ஜூன் (26) என்பவரை போலீசார் கைது செய்தனர்.