ரேஷன் அரிசி கடத்தல்; 2 பேர் கைது

ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-09 19:36 GMT

நெல்லை மாவட்ட உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார், நெல்லை- கன்னியாகுமரி சாலையில் பணகுடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அந்த வழியாக வந்த ஆட்டோவை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். அதில் சுமார் 300 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் ஆட்டோவில் இருந்த கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த நாசர் (வயது 53), கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை மேலபுத்தன்வீடு பகுதியை சோ்ந்த சிந்துகுமார் (48) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரேஷன் அரிசி மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்