4 ஆயிரம் கடல் குதிரைகள் கடத்தல்; 2 பேர் கைது
கீழக்கரை அருகே 4 ஆயிரம் கடல் குதிரைகளை கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கீழக்கரை
கீழக்கரை அருகே 4 ஆயிரம் கடல் குதிரைகளை கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடல் குதிரைகள்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இருந்து சென்னைக்கு எம்.சாண்ட் மணல் ஏற்றி சென்ற லாரியை கீழக்கரை அருகே போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அபிராமம் அருகில் மறித்து விசாரணை நடத்தினர். அப்போது லாரி ஓட்டுனர் மற்றும் உதவியாளர் முன்னுக்கும் பின் முரணாக பதில் கூறினார். அப்போது லாரியை சோதனையிட்ட போது கடல்வாழ் உயிரினங்களில் தடை செய்யப்பட்ட கடல் குதிரைகள் சாக்கு பையில் இருந்தது தெரியவந்தது. இது 8 கிலோ எடையுடன் 4 ஆயிரத்துக்கும் அதிகமான கடல்குதிரைகள் இருந்தன.
ஒவ்வொரு கடல் குதிரையும் சுமார் 500 குஞ்சுகள் பொறித்து விட்டு இறந்துவிடும் தன்மை கொண்டது. கர்ப்ப காலத்தில் கடல் குதிரையை பிடித்ததால் லட்சக்கணக்கான கடல் குதிரைகள் உருவாகும் நிலை அழிந்து விட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதைத்தொடர்ந்து கடல் குதிரை மற்றும் லாரியையும் பறிமுதல் செய்து அருகில் உள்ள சாயல்குடி வனச்சரகத்தில் ஒப்படைத்தனர்.
2 பேர் கைது
பின்னர் இந்த கடல்குதிரைகள், கீழக்கரை வனச்சரகர் செந்தில்குமார் மற்றும் சுற்றுச்சூழல் துணை மண்டல அலுவலர் கனகராஜ் ஆகியோரின் தலைமையிலான வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து சென்னை ரெட்கில்ஸ் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுனர் சசிகுமார்(வயது 33) மற்றும் கிளீனர் நரேந்திரகுமார்(32) ஆகிய இருவரையும் கைது செய்து லாரியை பறிமுதல் செய்ததோடு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.