2 டன் ரேஷன் அரிசி கடத்தல்; ஒருவர் கைது

ராமநாதபுரம் அருகே 2 டன் ரேஷன் அரிசியை கடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-30 18:45 GMT

2 டன் ரேஷன் அரிசி

ராமநாதபுரம் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவஞானபாண்டியன், ஏட்டுகள் முத்துகிருஷ்ணன், குமாரசாமி, தெய்வேந்திரன் ஆகியோர் ராமநாதபுரம், தேவிபட்டினம் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.

அதில் 40 கிலோ எடை கொண்ட 50 மூடைகளில் மொத்தம் 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. விசாரணையில் ரேஷன் அரிசியை வெளி மார்க்கெட்டில் விற்பதற்காக கடத்தி சென்றது தெரியவந்தது.

ஒருவர் கைது

இதையடுத்து 2 டன் ரேஷன் அரிசி மற்றும் அதை கடத்த பயன்படுத்திய வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வாகனத்தின் உரிமையாளர் மற்றும் டிரைவரான மதுரை ஐராவதநல்லூர் மாயழகு(வயது 30) என்பவரை கைது செய்தனர். மேலும் அரிசியை கடத்திய ராமநாதபுரத்தை சேர்ந்த குமாரவேல் என்பவரை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்