புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-09-13 18:10 GMT

மோகனூர்

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், நாமக்கல் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையத்தின் சார்பில், புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பெ.முருகன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாமக்கல் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மருத்துவ அலுவலர் லலிதா கலந்து கொண்டு புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், நாட்டில் கேன்சர் நோய் அதிகரித்து வருவதற்கு புகையிலை முக்கிய காரணம் என்றும், இதில் உள்ள நிக்கோட்டின் என்ற பொருள் பல்வேறு பாதிப்புகளை மூளையில் ஏற்படுகிறது என்றும், நுரையீரல் போன்ற பகுதிகள் பாதிக்கப்பட்டு தலை முதல் கால் வரை பல்வேறு உபாதைகள் ஏற்படுத்துவதாகவும் கூறினார். புகையிலை பயன்படுத்துவோர் மட்டுமின்றி அருகாமையில் உள்ளவர்களும் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார். தொடர்ந்து புகையிலை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் வெஸ்லி, செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் சந்திரசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்