புகையில்லா போகி பண்டிகை விழிப்புணர்வு உர்வலம்

வாணியம்பாடியில் புகையில்லா போகி பண்டிகை விழிப்புணர்வு உர்வலம் நடைபெற்றது.

Update: 2023-01-12 11:38 GMT

வாணியம்பாடி நகராட்சி சார்பில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் உறுதிமொழி ஏற்பு வாணியம்பாடி பஸ் நிலையத்தில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் மாரி செல்வி தலைமையில் தூய்மை காவலர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றனர். பின்னர் புகையில்லா போகி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை நகராட்சி தலைவர் உமா சிவாஜி கணேசன் வழங்கி தொடங்கி வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் சம்பத், நகர கூட்டுறவு வங்கி தலைவர் வி.எஸ்.சாரதி குமார் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து புகையில்லா போகி குறித்த விழிப்புணர் ஊர்வலம் நடைபெற்றது பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்றது. அப்போது பொதுமக்களிடமிருந்து பழைய பொருட்களை தூய்மை காவலர்கள் சேகரித்தினர். நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்