புகையில்லா போகி பண்டிகை விழிப்புணர்வு பேரணி

புகையில்லா போகி பண்டிகை விழிப்புணர்வு பேரணி

Update: 2023-01-10 20:49 GMT

கொல்லங்கோடு:

கொல்லங்கோடு நகராட்சியில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது குப்பையை பொது இடங்களில் தீயிட்டு எரிக்காமல் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு புகையில்லா போகி என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை நகராட்சி தலைவர் ராணி ஸ்டீபன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆணையாளர் தேவிகா முன்னிலை வகித்தார். பேரணி கொல்லங்கோடு நகராட்சி அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கி மெயின் ரோடு வழியாக கண்ணனாகம் வரை நடந்தது. இதில் சுகாதார ஆய்வாளர் குருசாமி, தூய்மை இந்தியா இயக்க மேற்பார்வையாளர் ஜூடிட் சோபியா மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சி மேலாளர், நகராட்சி பொறியாளர்,பரப்புரையாளர்கள், தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்