பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகள்

அம்பை தொகுதியில் பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகள்- இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

Update: 2022-07-07 21:31 GMT

சேரன்மாதேவி:

அம்பை தொகுதியில் 2021-2022-ம் ஆண்டில் 17 பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதற்கு இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.40 லட்சம் வழங்கினார். அதன்படி முதற்கட்டமாக கோபாலசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சேரன்மாதேவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கூனியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வீரவநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. அந்தந்த பள்ளிக்கூடங்களுக்கு சென்று ஸ்மார்ட் வகுப்பறைகளை திறந்து வைத்தார். விழாவில் சேரன்மாதேவி வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரகுமார், அ.தி.மு.க. மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கூனியூர் மாடசாமி, சேரன்மாதேவி ஒன்றிய செயலாளர் மாரிச்செல்வம், அம்பை ஒன்றிய துணை செயலாளர் பிராங்கிளின், பொதுக்குழு உறுப்பினர் செவல் முத்துசாமி, முன்னாள் மாவட்ட ஆதிதிராவிடர் நல குழு உறுப்பினர் வெள்ளத்துரை, நகர செயலாளர்கள் சேரன்மாதேவி பழனிகுமார், விக்கிரமசிங்கபுரம் கண்ணன், புதுக்குடி பஞ்சாயத்து தலைவர் சுப்பிரமணியன், மணிமுத்தாறு முன்னாள் பேரூராட்சி தலைவர் சிவன் பாபு, சேரன்மாதேவி முன்னாள் பேரூராட்சி தலைவர் பாபநாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்