மாடுகளுக்கு கழலை நோய் தடுப்பூசி

வெங்கடாசலபுரத்தில் மாடுகளுக்கு கழலை நோய் தடுப்பூசி போடப்பட்டது.

Update: 2023-08-05 18:45 GMT

கோவில்பட்டி:

வைரஸ் நச்சுயிரியால் ஏற்படும் அம்மை வகையைச் சார்ந்த நோயான தோல் கழலை நோய், பூச்சிக்கடியால் மாடுகளிடையே பரவும். இந்நோய் மாடுகளின் தோலின் மேல் கட்டிகளை ஏற்படுத்தும். தூத்துக்குடி மாவட்ட கலெக்டரின் வழிநடத்தலின் பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 14 ஆயிரம் மாடுகளுக்கு கழலை நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது.

கோவில்பட்டி அருகே உள்ள வெங்கடாசலபுரத்தில் தோல் கழலை நோய் தடுப்பூசி முகாமை தூத்துக்குடி கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் சஞ்சீவ்ராஜ் தொடங்கி வைத்தார். முகாமில் 100 மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. முகாமில் தூத்துக்குடி நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் டாக்டர் சங்கரநாராயணன், கோவில்பட்டி உதவி இயக்குனர் டாக்டர் விஜயஸ்ரீ, நடமாடும் கால்நடை மருந்தக உதவி இயக்குனர் டாக்டர் ராகுல் கிருஷ்ணகாந்த், கால்நடை ஆய்வாளர் பொன்னுலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்