சிறுதானிய உணவுவகைகள் செய்முறை பயிற்சி
கோவில்பட்டியில் சிறுதானிய உணவுவகைகள் செய்முறை பயிற்சி நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வ.உ.சி அரசு மேல்நிலைப்பள்ளியில் தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில், சிறுதானிய உணவுவகைகள் செயல்முறை விளக்க முகாம் நேற்று நடந்தது. தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் மாரியப்பன் தலைமை தாங்கினார். கோவில்பட்டி உணவு பாதுகாப்பு அலுவலர் ஜோதிபாசு வரவேற்று பேசினார். காளீஸ்வரி, மகேஸ்வரி ஆகியோர் சிறுதானியங்களில் இருந்து செய்யப்படும் உணவு பண்டங்களான கேழ்வரகு அடை, சிறுதானிய மிட்டாய் உள்ளிட்டவற்றை தயாரிப்பது குறித்து செயல்விளக்கம் அளித்தனர். சிறுதானிய உணவு பதார்த்தங்கள், அதன் பயன்கள் பற்றிய துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டன. கோவில்பட்டி குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தாஜ்நிஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், சுயஉதவிக்குழுவினர், பள்ளி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.