ஊட்டி
உலக சிறுதானிய ஆண்டை முன்னிட்டு நீலகிரி மாவட்ட 31-வது தேசிய மாணவர் படை தனி அணி சார்பில் ஊட்டியை அடுத்த எடக்காடு அரசு மேல்நிலை பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கணித ஆசிரியர் சந்திரன் தலைமை தாங்கினார். ஆங்கில ஆசிரியர் நல்லேந்திரன் வரவேற்றார். தேசிய பாதுகாப்பு படை அதிகாரி அவில்தார் சீனிவாசன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் ஜோதி, சத்யாதேவி, பிரியா, ஷாலினி, வித்யா, ரோஸ்மேரி ஆகியோர் கலந்து கொண்டு சிறு தானிய உணவின் முக்கியத்துவம், சக்தி தரும் உணவு, வளர்ச்சி தரும் உணவு, பாதுகாப்பு தரும் உணவு குறித்து மாணவ-மாணவிகளுக்கு விளக்கமளித்தனர். அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் சிறு தானிய உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டன. தொடர்ந்து அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் சத்துமாவு கஞ்சி வழங்கப்பட்டது. முடிவில் ஆசிரியர் பழனிசாமி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை தேசிய பாதுகாப்பு படை அலுவலர் காமராஜ் செய்திருந்தார். இதேபோல் கேத்தி பாலாடா பள்ளி சார்பில் தேசிய பாதுகாப்பு படை அலுவலர் சந்திரசேகரன் தலைமையில் சிறு தானிய பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் நடந்தது.