பல்லடம்
இதன்படி பல்லடம் அருகே உள்ள அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குறுமைய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் 14 வயதுக்குட்பட்டோருக்கான கபடி போட்டியில் கணபதிபாளையம் அரசு பள்ளி முதலிடம் பெற்றது. வேலம்பாளையம் அரசு பள்ளி 2 வது இடம் பிடித்தது. 17 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில், பல்லடம் அரசு ஆண்கள் பள்ளி முதலிடம், யுனிவர்சல் பள்ளி 2-வது இடம் பிடித்தது. 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கரடிவாவி எஸ்.எல்.என்.எம். பள்ளி முதலிடம், ஆதர்ஷ் பள்ளி 2-வது இடம் பிடித்தது.
இதேபோல அங்கு நடைபெற்ற இறகுப்பந்து போட்டியில், மாணவர்கள் 14 வயது ஒற்றையர் பிரிவில் இன்பன்ட் ஜீசஸ் பள்ளி முதலிடம். ஆதர்ஷ் மெட்ரிக் பள்ளி 2 வது இடம் பிடித்தது. 14 வயது இரட்டையர் பிரிவில், ஆதர்ஷ் பள்ளி முதலிடம். இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி 2-ம் இடம். 17 வயது ஒற்றையர், மற்றும் இரட்டையர் பிரிவில், ப்ளூ பேர்டு மெட்ரிக் பள்ளி முதலிடம். இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி 2-ம்இடம் 19 வயது ஒற்றையர் பிரிவில், ஆதர்ஷ் மெட்ரிக் பள்ளி முதலிடம். யுனிவர்சல் மெட்ரிக் பள்ளி2-ம் இடம்.இரட்டையர் பிரிவில், ப்ளூ பேர்டு பள்ளி முதலிடம். ஆதர்ஷ் பள்ளி இரண்டாம் இடம். மாணவியர், 17 வயது ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில், ஆதர்ஷ் மெட்ரிக் பள்ளி முதலிடம். ராஜா மெட்ரிக் பள்ளி இரண்டாம் இடம். 19 வயது ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில், சுவாமி விவேகானந்தா மெட்ரிக் பள்ளி முதலிடம். ஜெயந்தி மெட்ரிக் பள்ளி 2 வது இடம் பிடித்தது.குறுமைய விளையாட்டு போட்டிகளை ஜெயந்தி கல்வி குழும நிறுவனர் கிருஷ்ணன், கோடங்கிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் காவி. பழனிச்சாமி ஆகியோர் துவக்கி வைத்தனர். உடற்கல்வி ஆசிரியர்கள் கல்பனா, மருதை, மற்றும் ஆசிரியர்கள் குறுமைய விளையாட்டு போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.