காங்கயத்தில் வீட்டின் முன்பு விளையாடிய சிறுவனை காணவில்லை. அவன் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற ேகாணத்தில் போலீசார், பெற்றோர், உறவினர்கள் தேடி வருகிறார்கள்.

காங்கயத்தில் வீட்டின் முன்பு விளையாடிய சிறுவனை காணவில்லை. அவன் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற ேகாணத்தில் போலீசார், பெற்றோர், உறவினர்கள் தேடி வருகிறார்கள்.

Update: 2023-02-03 12:20 GMT

காங்கயம்

காங்கயத்தில் வீட்டின் முன்பு விளையாடிய சிறுவனை காணவில்லை. அவன் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற ேகாணத்தில் போலீசார், பெற்றோர், உறவினர்கள் தேடி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சிறுவன் மாயம்

திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஏ.சி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 30). இவர் லாரி டிரைவர். இவருடைய மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு 3½ வயதில் ரிதன் என்ற மகன் உள்ளான்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை மஞ்சுளா தனது மகன் ரிதனுடன் அதே பகுதியில் உள்ள அவரது தோழி வீட்டிற்கு சென்றார். பின்னர் மாலை அவர்களது வீட்டிற்கு செல்ல புறப்படும் போது வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ரிதனை காணவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த மஞ்சுளா அக்கம் பக்கத்தில் தேடினார். பலரிடம் விசாரித்து பார்த்தார். ஆனாலும் சிறுவன் ரிதனை கண்டு பிடிக்க முடியவில்லை. பின்னர் உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிறுவனை பல இடங்களில் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதி மற்றும் சுற்றுவட்டார பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் சிறுவன் மாயமான சம்பவம் குறித்து காங்கயம் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

கடத்தப்பட்டானா?

இது தொடர்பாக காங்கயம் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துக்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் காமராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். பின்னர் 20-க்கும் மேற்பட்ட போலீசார் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் அப்பகுதியில் உள்ள வீடுகள், தண்ணீர் தொட்டிகள், வீட்டின் மொட்டை மாடி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் போலீசார் தேடினர். இதை அறிந்த அப்பகுதி பொதுமக்களும் இரவு முழுவதும் போலீசாருடன் இணைந்து காணாமல் போன சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இரவு முழுவதும் சிறுவனை தேடியும் கிடைக்கவில்லை. இதனால் சிறுவனை யாராவது கடத்தி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேடும் பணி தீவிரம்

மேலும் சிறுவனை பற்றி அப்பகுதி பொதுமக்களிடம் தனித்தனியே விசாரணை நடத்தியும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டும் சிறுவனை தேடி வருகின்றனர். சிறுவனின் உறவினர்கள், நண்பர்கள், அப்பகுதியினர் சிறுவனின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தீவிரமாக தேடி வருகின்றனர். இருப்பினும் சிறுவனை பற்றி நேற்று மாலை வரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த சம்பவம் காங்கயம் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

---

சிறுவன் ரிதன்

Tags:    

மேலும் செய்திகள்