எஸ்.எம்.ஏ. பள்ளி மாணவர்கள் சாதனை

பிளஸ்-2 தேர்வில் எஸ்.எம்.ஏ. பள்ளி மாணவர்கள் சாதனை

Update: 2022-06-20 17:41 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள அடைக்கலப்பட்டணம், எஸ்.எம்.ஏ. மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 52 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இதில் பி.பிரியதர்ஷினி 588 மதிப்பெண்கள் எடுத்து சிறப்பிடம் பெற்றார். எம்.பிரியதர்ஷினி 586 மதிப்பெண்களும், த.ரசிகா 585 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர். பள்ளியின் சராசரி மதிப்பெண் 600-க்கு 536 ஆகவும், மாணவர்களின் மதிப்பெண் சதவீதம் 100-க்கு 89 ஆகவும் உயர்ந்து மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

பள்ளியில் பயின்ற மாணவர்களில் கணிதத்தில் ஒருவரும், வேதியியல் பாடத்தில் 2 பேரும், உயிரியலில் 4 பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 6 பேரும், கணக்கு பதிவியல் பாடத்தில் 4 பேரும், வணிகவியலில் 2 பேரும், பொருளியலில் 2 பேரும், வணிக கணிதத்தில் ஒருவரும், கணினி பயன்பாடு பாடத்தில் ஒருவரும் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்து சாதனை புரிந்துள்ளனர்.

580 மதிப்பெண்களுக்கு மேல் 4 பேரும், 550-க்கு மேல் 26 பேரும், 500-க்கு மேல் 50 பேரும் பெற்றுள்ளனர்.

சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் ராஜசேகரன், பள்ளி முதல்வர் டாக்டர் மகேஸ்வரி, துணை முதல்வர் சரளா ராமச்சந்திரன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். சிறப்பிடம் பெற்ற மாணவிகள் பி.பிரியதர்ஷினி, எம்.பிரியதர்ஷினி, த.ரசிகா ஆகியோருக்கு பரிசும், கேடயமும் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்