இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
கமுதி
கமுதி -கோட்டைமேட்டில் உள்ள தனி ஆயுதப்படை வளாகத்தில் மீனவ கிராம இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. ஓய்வு பெற்ற கடலோர காவல்படை லெப்ட்டினன்ட் தலைமையில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டது. ஓய்வு பெற்ற கடலோர காவல்படை லெப்ட்டினன்ட் ஈசன், ராமநாதபுரம் கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு திறன் மேம்பாட்டு வகுப்புகளை ஆய்வு செய்தனர். 90 நாட்கள் உணவு, உறைவிடம், ஊக்க தொகை மாதம் ஆயிரம் உள்ளிட்ட ஏற்பாடு செய்த இந்த பயிற்சி முடித்த மீனவ இளைஞர்களுக்கு கடற்படை மற்றும் கடலோர காவல் படையில் வேலையில் சேர முன்னுரிமை வழங்கபடும். இதனால் மீனவ குடும்பத்தினர் பெரிதும் பயன் அடைவர். கடந்த ஆண்டு இங்கு பயிற்சி எடுத்த தஞ்சாவூரை சேர்ந்த முத்துபாண்டி தற்போது இந்திய கப்பல் படையில் பணியாற்றுவதால் அவரும் இந்த விழாவிற்கு வந்து பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தினார்.