இல்லம்தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

தன்னார்வலர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது.

Update: 2022-08-23 17:30 GMT

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை நடத்தும் இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி 2 நாட்கள் திருப்பத்தூர் அருகே மடவாளம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி குறுவள மையத்தில் நடந்தது. பயிற்சியில் தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டையும், கற்றல், கற்பித்தல் கண்காட்சியில் பங்கேற்றமைக்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. திருப்பத்தூர் வட்டார கல்வி அலுவலர் நெடுஞ்செழியன் சான்றிதழ் வழங்கினார். இல்லம்தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செண்பகவள்ளி அடையாள அட்டையை வழங்கினார். ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கோபிநாதன், ஆசிரிய பயிற்றுனர் ரகு மற்றும் கருத்தாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்