குந்தலாடி அரசு பள்ளியில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

குந்தலாடி அரசு பள்ளியில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

Update: 2023-09-06 19:30 GMT

பந்தலூர்

பந்தலூர்அருகே குந்தலாடி அரசு உயர்நிலை பள்ளியில் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமிற்கு தலைமை ஆசிரியர் பஜித்குமார் தலைமை தாங்கினார். ஆசிரியர் கோபு வரவேற்று பேசினார். திறன் மேம்பாட்டு பயிற்ச்சியாளர்கள் ரவீந்திரன், மற்றும் அஜித் ஆகியோர் மாணவர்களுக்கு வாழ்க்கை கல்வி திறமைகளை வளர்த்துக் கொள்ளுதல், சுய பரிசோதனை, தீர்மானமான முடிவுகள் எடுத்தல், திறமைகளை எவ்வாறு உணர்வது, அவற்றை மேம்படுத்துதல், கல்வியின் முக்கியத்துவம், கற்றலில் மேம்பாடு, நினைவாற்றல் மேம்படுத்துதல் குறித்து விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் சுஜித் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்