சிவந்தி மகளிர் கல்லூரியில்நீர்சேமிப்பு விழிப்புணர்வு கூட்டம்
சிவந்தி மகளிர் கல்லூரியில் நீர்சேமிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
தட்டார்மடம்:
பிறைகுடியிருப்பு சிவந்தி மகளிர் கல்வியியல் கல்லூரியில் நீர் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கல்லூரி முதல்வர் மாரியப்பன் தலைமை தாங்கினார். சிகரம் அறக்கட்டளை இயக்குனர் முருகன் நீர் சேமிப்பு பற்றியும், நீர் சேமிப்பால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் பேசினார். நீர் சம்பந்தமான கேள்விகள் மாணவிகளிடம் கேட்கப்பட்டு, விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.